பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் – Sukanya Samriddhi Yojana Scheme

பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் 2022 | Selvamagal Semippu Thittam | Sukanya Samriddhi Yojana Scheme: அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் பாரத பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் பற்றி பார்க்க போகிறோம் அதில் நாம் இன்று காணப்போகும் திட்டம் பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம், ஆங்கிலத்தில் Pradhan Mantri Sukanya Samriddhi Yojana என்று சொல்வார்கள். இந்தத் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் சார்ந்த திட்டங்கள் (Schemes for Women and Child Development) கீழ் வரும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் இந்திய அஞ்சல் துறையால் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றும் கூறுவார்கள். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை மட்டும் இத்திட்டத்தில் சேர்க்க இயலும். பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம்

பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் 2022 விபரங்கள்

திட்டத்தின் பெயர் பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம்
Scheme Name Pradhan Mantri Sukanya Samriddhi Yojana Scheme
வகை Government Scheme
பயனாளிகள் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.nsiindia.gov.in
விண்ணப்பிக்கும் முறை அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கை தொடங்கலாம்

Sukanya Samriddhi Yojana செல்வமகள் சேமிப்புத் திட்டம் நோக்கம்

  • பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி திருமணம் போன்றவற்றிற்கான சேமிப்பு திட்டம் ஆகும்
  • ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டம். இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்தால் மூன்று பேர் பயன் பெறலாம்
  • குறைந்தபட்சமாக ரூ.250 லிருந்து ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்
  • முதலீட்டுக்கு வரி விலக்கு உண்டு
  • 18 வயது முடிந்ததும் முதிர்வு தொகை யில் இருந்து 50 சதவீதம் மேற்படிப்பு செலவுக்காக பெற்றுக்கொள்ளலாம்
  • பெண் 21வயது முடிந்ததும் முதிர்வு தொகை கிடைக்கும்

எவ்வாறு செல்வமகள் சேமிப்புத் திட்டம் விண்ணப்பிக்க வேண்டும்

  • அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கை தொடங்கலாம்
  • இத்திட்டத்தில் சேர பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை வயதுச் சான்றாக அளிக்கலாம்.

மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்க அனுமதிபெற்ற இந்திய வங்கிகளின் பட்டியலை கீழே காணலாம்.

  • பாரத ஸ்டேட் வங்கி
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர் & ஜெய்ப்பூர்
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத்
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்
  • அலகாபாத் வங்கி
  • ஆந்திரா வங்கி
  • ஆக்சிஸ் வங்கி
  • பேங்க் ஆப் பரோடா
  • பேங்க் ஆப் இந்தியா
  • பேங்க் ஆப் மகாராஷ்டிரா (BoM)
  • கனரா வங்கி
  • சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
  • கார்ப்பரேஷன் வங்கி
  • தேனா வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • ஐடிபிஐ வங்கி
  • இந்தியன் வங்கி
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
  • பஞ்சாப் தேசிய வங்கி
  • பஞ்சாப் & சிந்து வங்கி
  • சிண்டிகேட் வங்கி
  • யூகோ வங்கி
  • இந்திய யூனியன் வங்கி
  • யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா
  • விஜயா வங்கி

Related

Leave a Comment