பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ.6000 நிதி உதவி திட்டம் 2023 – PM Kisan Scheme

பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ.6000 நிதி உதவி திட்டம் 2023 – PM Kisan Scheme – PM KISAN விவசாய நிதி உதவி திட்டம்: அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் பாரத பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் பற்றி பார்க்க போகிறோம் அதில் நாம் இன்று காணப்போகும் திட்டம் பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ.6000 நிதி உதவி திட்டம், ஆங்கிலத்தில் Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana (PMKSNY) என்று சொல்வார்கள். இந்தத் PMKSNY திட்டம் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள் (Schemes for Agricultural Development) கீழ் வரும்.

பயிர் ஆரோக்கியம் மற்றும் தகுந்த விளைச்சலை உறுதி செய்வதற்காக, எதிர்பார்க்கப்படும் பண்ணை வருமானம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு, நிலத்தை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000/- தொகையானது, சில விலக்குகளுக்கு உட்பட்டு, நேரடியாக தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடி பலன் பரிமாற்ற முறையின் கீழ் மத்திய அரசால் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ.6000 நிதி உதவி திட்டம் 2023 விபரங்கள்

திட்டத்தின் பெயர் பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ.6000 நிதி உதவி திட்டம்
Scheme Name Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana (PMKSNY)
வகை Government Scheme
பயனாளிகள் அனைத்து விவசாயிகள்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://pmkisan.gov.in/
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் வாயிலாக

PM KISAN விவசாய நிதிஉதவி திட்டம் நோக்கம்

  • விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசு மூலம் நிதி வழங்குதல்
  • வருடம் ரூ. 6000 மூன்று தவணைகளாக நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துதல்
  • வருடத்தின் முதல் தவணை ஏப்ரல்- ஜூலை, இரண்டாம் தவணை ஆகஸ்ட்-நவம்பர், மூன்றாம் தவணை டிசம்பர்-மார்ச் மாதங்களில் செலுத்தப்படும்
  • இதன் மூலம் 12 கோடி ஏழை விவசாயிகள் பலன் பெறுவர்

எவ்வாறு PM Kisan திட்டம் விண்ணப்பிக்க வேண்டும்

  • பிஎம்-கிசான் ஆன்லைன் பதிவு மூலமாகவோ பதிவு செய்யலாம்

Related

Leave a Comment