பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டம் 2023

பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டம் 2023 – PMFBY Scheme: அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் பாரத பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் பற்றி பார்க்க போகிறோம் அதில் நாம் இன்று காணப்போகும் திட்டம் பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டம் ஆங்கிலத்தில் Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) என்று சொல்வார்கள். இந்தத் PMFBY திட்டம் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள் (Schemes for Agricultural Development) கீழ் வரும்.

இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பல முகவர் கட்டமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் துறையின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயம், ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலன் (DAC&FW), விவசாய அமைச்சகம் & விவசாயிகள் நலன் (MoA&FW), இந்திய அரசு (GOI) மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலம் பல்வேறு பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பில்; அதாவது நிதி நிறுவனங்கள் போன்றவை வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் அவற்றின் ஒழுங்குமுறை உடல்கள், அரசு துறைகள் விவசாயம், கூட்டுறவு, தோட்டக்கலை, புள்ளியியல், வருவாய், தகவல்/அறிவியல் & தொழில்நுட்பம், பஞ்சாயத்து ராஜ் போன்றவை.

பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டம் 2023 விபரங்கள்

திட்டத்தின் பெயர் பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டம்
Scheme Name Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)
வகை Government Scheme
பயனாளிகள் அனைத்து விவசாயிகள்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://pmfby.gov.in/
விண்ணப்பிக்கும் முறை நிதி நிறுவனங்கள் மூலமாக மற்றும் ஆன்லைன் வாயிலாக

பயிர் காப்பீடு திட்டம் 2023 நோக்கம்

 • இயற்கை சீற்றங்கள் மற்றும் பூச்சி தாக்குதலின் உண்டாகும் பயிர் பாதிப்புக்கான காப்பீடு வழங்குதல்
 • விதை முதல் அறுவடை வரையிலான முழுமையான பயிர் காப்பீடு
 • சொந்த நிலம், குத்தகை, கூட்டாக விவசாயம், செய்தவர்கள் அனைவரும் இதில் இணையலாம்
 • மிக குறைந்த காப்பீடு பிரீமியம் 2/5% தொகை மட்டுமே மீதியை மத்திய அரசு செலுத்தி கொள்ளும்
 • வங்கியில் விவசாய கடன் உடன் இதனை இணைத்து  ஏற்றுக் கொள்ளலாம்
 • ஆண்டுக்கு 5.5 கோடி விண்ணப்பங்கள் பெற்று உலகிலேயே மிகப்பெரிய பயிர்காப்பீடு திட்டமாக இத்திட்டம் விளங்குகிறது

தேவையான ஆவணங்கள்

 • விவசாயிகளின் வங்கி கணக்கு எண்
 • ஆதார் எண்
 • நில ஆவணம் அல்லது குத்தகை ஆவணம்

எவ்வாறு பயிர் காப்பீட்டு திட்டம் விண்ணப்பிக்க வேண்டும்

 • மேற்படி சொன்ன அனைத்து ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்
 • 10 தனியார் காப்பீடு நிறுவனங்கள் தேசிய வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் வேளாண் விரிவாக்க மையம் இவர்களை தொடர்பு கொண்டேன் விண்ணப்பிக்கலாம்
 • pmfby.gov.in என்ற இணையதளம் மூலமாக தாங்களே Online விண்ணப்பிக்கலாம்
 • பிரீமியம் தொகை போன்ற விவரங்களை அந்த இணையதளம் மூலமாக தாங்களே கணக்கீடு செய்து கொள்ளலாம்.

10 தனியார் காப்பீடு நிறுவனங்கள்

 • ICICI Lombard General Insurance Company Limited
 • HDFC ergo General Insurance Company Limited
 • IFFCO tokio General Insurance Company Limited
 • Cholamandalam MS General Insurance Company Limited
 • Bajaj Allianz General Insurance Company Limited
 • Reliance general insurance company limited
 • Future Generali India Insurance Company Limited
 • Tata AIG General Insurance Company Limited
 • SBI General Insurance Company Limited
 • Universal sompo General Insurance Company Limited

Read this

Leave a Comment