தினமும் Rs.1000 கூடுதல் வருமானம் – ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும்

தினமும் Rs.1000 கூடுதல் வருமானம்: எந்த வேலை செய்தாலும் கூடுதல் வருமானம் என்பது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகும். ஒரு மணி நேரம் வேலை செய்து தினமும் ரூபாய் 1000 கூடுதலாக வருமானம் செய்வது எப்படி என்பதை நாம் இந்த கட்டுரையில் காணப்போகிறோம்.

வீட்டிலிருந்தபடியே நம்முடைய கைபேசி மூலம் பங்குச் சந்தை மூலம் சுலபமாக வருமானம் ஈட்ட முடியும். நாம் எந்த வேலை செய்தாலும் அந்த வேலையை முடிந்த பிறகு, தாராளமாக எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை தெளிவாக ஆராய்ந்து, முதலீடு செய்தால் தினமும் சுலபமாக ஆயிரம் ரூபாய் நம்மால் வருமானம் ஈட்ட இயலும்.

தினமும் Rs.1000 கூடுதல் வருமானம் வேண்டும் ஆனால், பங்குச்சந்தை என்றாலே பயம்

 • அனைவர் மனதிலும் பங்குச்சந்தை என்றாலே அதில் நஷ்டம் மட்டும் தான் வரும் என்ற எண்ணம் இருக்கும்
 • இதனால் அனைவர் மனதிலும் பங்குச்சந்தை பற்றிய ஆர்வமும் புரிதலும் கிடையாது
 • பங்குச் சந்தையில் பல விதமான முதலீடுகள் உள்ளன அதைப்பற்றியும் யாரும் தெரிந்து கொள்வது கிடையாது
 • இவை அனைத்தையும் நாம் தெரிந்துகொண்டால் தாராளமாக நம்ம அவளும் பங்குச்சந்தையில் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் அதை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்

பங்குச்சந்தை பற்றிய தகவல் எங்கு கிடைக்கும்

நம் இந்தியாவில் இரண்டு பெரிய பங்குச் சந்தைகள் உள்ளன அதில் ஒன்று பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) ஆகும். நம் இந்தியாவில் அதிகமாக வர்த்தகம் நடைபெறும் பங்குச் சந்தை NSE ஆகும். nseindia.com அதிகாரப்பூர்வ வலைத்தளம். இந்த வலைத்தளம் மூலம் பங்குகள் பற்றிய அனைத்து தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள காணொளி மூலம் எவ்வாறு பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பங்குச்சந்தையில் எவ்வாறு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்

 • டாட்டா ஸ்டீல் என்ற பங்கின் விலை தற்போது 105 ரூபாய் உள்ளன.
 • நான் இன்று 300 பங்குகளை வாங்க போகிறேன். அதன் மொத்த விலை 31,500 ஆகும்.
 • சராசரியாக டாட்டா ஸ்டீல் பங்குகள் 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விலை உயரும்.
 • அப்படி 3 ரூபாய் விலை உயர்ந்தால் நான் வாங்கிய 300 பங்குகள், மூன்று ரூபாய் உயர்ந்திருக்கும், ஆக மொத்தம் எனக்கு 900 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்

குறிப்பு: அனைத்து பங்குகளும் தினமும் உயரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. தினமும் நாம் ஆயிரம் வருமானம் வேண்டுமென்றால் பங்குச் சந்தைகளில் பற்றிய அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது ஒரு பங்கின் விலை இறங்கும், எப்போது ஒரு பங்கின் விலை ஏறும், நாம் என்று எந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு இன்றைய பங்கு சந்தை எந்த எந்த முறையில் நடந்து உள்ளன என்பதை நாம் ஆராய்ந்து அதன் பின்னர் பங்குகளை வாங்கலாம்.

இந்த Trade Link Tamil என்ற Telegram Channel மூலம் இலவசமாக அனைத்து தகவல்களை தினமும் தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளை வாங்க Demat Account வேண்டும் அதை எவ்வாறு ஆரம்பிப்பது

Zerodha, Angel One, Paytm Money, Upstox App மூலம் Demat Account ஓபன் செய்யலாம். இந்த டீ மேட் அக்கவுண்ட் நாம் ஓபன் செய்ய வேண்டும் என்றால் ஆறு மாத காலம் நம்முடைய வங்கிக் கணக்கில் Rs.10000/- மேல் இருந்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தைகள் எந்தவிதமான வர்த்தகம் நடைபெறும்

 • Intraday Trading
 • Long Term Trading
 • Swing Trading
 • Future and Options

எவ்வாறு பங்குச்சந்தையில் நாம் நஷ்டம் அடைகிறோம்

95% பங்குச் சந்தையில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் Future and options என்ற ஒரு டிரேடிங் முறையாகும். இந்த டிரேடிங் முறையில் மக்களை அதிக அளவு ஆசைகளை ஏற்படுத்தி அதிக அளவு முதலீடு செய்வதன் மூலம் நஷ்டம் அடைகிறார்கள்.

நாம் மேற்கூறிய Tata Steel பற்றிய பங்குகள் அனைத்துமே Long Term Trading ஆகும். நாம் முதலீடு செய்த பின்னர் டாசில் பங்குகள் விலை குறைந்தாலும், நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நல்ல பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது கண்டிப்பாக நமக்கு லாபம் கிடைக்கும். நாளை நமக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் போனாலும், ஒரு வாரம் பிறகு நாம் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக நாம் திரும்ப பெறலாம்.

முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை

 • ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் மூன்று வருடம் அல்லது நான்கு வருடம் பட்டப்படிப்பை படிக்கிறோம்.
 • அதேபோன்று பங்குச் சந்தையில் நல்ல லாபம் வர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
 • அதிக பேராசை கூடாது
 • இருக்கும் வேலையை விட்டு பங்குச்சந்தைகள் வரக்கூடாது
 • அனைத்து பணத்தையும் முதலீடு செய்யக்கூடாது
 • யாராவது இந்தப் பங்குகளை வாங்க சொன்னாள் உடனே வாங்க கூடாது அதை நன்கு நீங்கள் ஆராய்ந்த பிறகுதான் வாங்க வேண்டும்

Conclusion

பங்குச் சந்தையில் தினமும் எவ்வாறு நாம் ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் முடியும் என்பதை பார்த்தோம். பங்குச் சந்தை பற்றிய விழிப்புணர்வு, நிறைகள், குறைகள், அனைத்தையும் நாம் தெரிந்து கொண்டோம். தமிழகத்தில் உள்ள அனைவரும் பங்கு சந்தை பற்றிய ஒரு விழிப்புணர்வு கண்டிப்பாக வேண்டும். தாங்கள் சந்தையில் முதலீடு செய்யலாம், செய்யாமல் போகலாம். ஆனால் எவ்வாறு வர்த்தகம் நடைபெறுகிறது என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் கேட்கலாம்.

3 thoughts on “தினமும் Rs.1000 கூடுதல் வருமானம் – ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும்”

 1. Yes I am interested in share mkt but properly I don’t know… Who can properly helped me any coaching classes send me the contact number…

  Reply

Leave a Comment